வியாழன், 6 செப்டம்பர், 2012


புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டீர்களா என கோத்தபாயவிடம் போலந்து கேள்வி
போலந்துக்கான இலங்கைத் தூதரகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டீர்களா என போலந்து வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வினவியுள்ளது.
போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரடாஸ்லோவ் சிகோர்ஸ்கியை பாதுகாப்புச் செயலாளர் சந்தித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்று முழுதாக தோற்கடித்து விட்டீர்களா என இதன் போது பாதுகாப்புச் செயலாளரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் வினவியுள்ளார்.
போலந்து அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை பாதுகாப்புச் செயலாளர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
போலந்து ஜனாதிபதி கொமரோஸ்கியை சந்திக்கும் வாய்ப்பும் பாதுகாப்புச் செயலாளருக்கு கிட்டியதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக