வியாழன், 6 செப்டம்பர், 2012


ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நல்லூர் பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கமைய விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்ட  ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றத்திற்கு வரத் தவறியுள்ளதால் அவரைக் கைது செய்யுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த முறைப்பாட்டிற்கமைய மூன்று முறை  அழைப்பாணை அனுப்பியும் நீதிமன்றத்திற்கு அவர் வரவில்லை எனவும்,  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கமையவே அவரைக் கைது செய்யுமாறு யாழ் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அந்தச் சபையின் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியமை தொடர்பாக நல்லூர் பிரதேச சபை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மீது வழக்குத் தொடுத்திருந்தது.
இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சார்பில் சட்டத்தரணி சரோஜினி இளங்கோவனும், நல்லூர் பிரதேசசபை சார்பில் சட்டத்தரணி இராஜரட்ணமும் ஆஜராகியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக