வியாழன், 6 செப்டம்பர், 2012

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியாருமே எதிர் பாராத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார்  
 உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 


இதில் யாருமே எதிர் பாராத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெர்டிச் 7-6 (7-1), 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். பெடரர் இதுவரை 17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றுள்ளார். 

அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறையும் (2004, 2005, 2006, 2007, 2008) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 4 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 1முறையும் கைப்பற்றி உள்ளார். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் பட்டத்தை வென்றதால் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 6-வது முறையாக வென்று சாதனை படைப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு முன்னணி வீரர்களில் ஒருவரான நடாலும் காயத்தால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. ஆனால் பெடரரின் 6-வது அமெரிக்க ஓபன் பட்ட சாதனை வாய்ப்பை பெர்டிச் தடுத்துவிட்டார். 

அமெரிக்க ஓபனில் 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியிலும், 2010, 2011-ம் ஆண்டு அரை இறுதியிலும் தோற்ற பெடரர் இந்த முறை கால்இறுதியிலேயே தோற்றார். பெர்டிச் அரை இறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஆண்டி முர்ரேயை (இங்கிலாந்து) சந்திக்கிறார். முர்ரே கால்இறுதியில் 3-6, 7-6 (7-4) 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீரரான சிலிச்சை (குரோஷியா) தோற் கடித்தார். 7-ம் நிலை வீரரான டெல் போட்ரோ (அர்ஜென்டினா) 4-வது சுற்றில் 6-7 (1-7), 7-6 (7-4), 6-2, 6-4 என்ற கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோட்டிக்கை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ரோட்டிக் தோல்வியுடன் விடை பெற்றார். 

அமெரிக்க ஓபன் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். டெல்போட்ரோ கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். ஜோகோவிச் 4-வது சுற்றில் 6-4, 6-1, 3-1 என்ற கணக்கில் வாவெர்னி காவுக்கு (சுவிட்சர்லாந்து) எதிராக முன்னணியில் இருந்தபேது வாவெர்னிகா காயத்தால் விலகினார். இன்னொரு கால்இறுதியில் பெரர் (ஸ்பெயின்)- டிப்சரோவிச் (செர்பியா) மோதுகிறார்கள். 

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான மரிய ஷரபோவா (ரஷியா) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீராங்கனையான பர்ட்டோலியை (அமெரிக்கா) வென்றார். இதேபோல செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) அரை இறுதிக்கு முன்னேறினார். 

4-ம் நிலை வீராங்கனையான அவர் 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இவானோவிக்கை (செர்பியா) தோற்கடித்தார். அரை இறுதியில் மோதும் வீராங்கனை பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள் வருமாறு:- 

1. அசரென்கா (பெலாரஸ்)- ஷரபோவா (ரஷியா). 

2. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- சாரா இரானி (இத்தாலி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக