கலாநிதி மாறன் மீதான அமலாக்க இயக்குனரகம் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோதமாக 550 கோடி ரூபாய் பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரரும், சன் டிவி நிறுவன தலைவருமான கலாநிதி மாறன் மீது அமலாக்க இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்திருந்தது. கலாநிதி மாறன் மீதான இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.
இவ்விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கலாநிதிக்கு சமீபத்தில் தகுந்த ஆவணங்களுடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் மீதான வழக்கு விசாரணை பதிவு செய்யப்பட உள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில், பணம் பெற்றுக்கொண்டு மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவத்துக்கு சாதகமாக நடந்துகொண்டதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முதலில் மறுத்த தயாநிதி மாறன், பின்னர் இதே வழக்கு காரணமாகவே கடந்த வருடம் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக