வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

 சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மீது அவதூறாக வழக்கு தொடர்ந்ததை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சுப்பிரமணிய சாமி படத்தையும் கிழித்து எறிந்தனர். 

தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக