வரலாறு -siva-sandrabalan switzerland
_________
புங்குடுதீவு மண்ணில் ஏராளமான அம்மன் ஆலயங்கள் தீவின் எல்லாப் பகுதிகளிலும் அமைந்திருப்பது சிறப்பானது . இந்த ஆலயங்களில் சிறப்பான வரலாற்றையும் பழமையையும் கொண்ட பெருமைக்குரியது கண்ணகி
அம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும் .
அம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும் .
புங்குடுதீவு தென்கிழக்கு பகுதியில் வாழ்ந்து வந்த பெரிய நிலப்பிரபுவான கதிரவேலு ஆறுமுகம் (கறுப்பாத்தை உடையார் ) என்பவர் வாழ்ந்து வந்தார் .இவர் நிறைய கால்நடைகள் வளர்த்து வந்தார் .ஒரு நாள் இவரது மாடுகள் மேய்ச்சலுக்காகச் சென்று மாலைநேரத்தில் வீடு திரும்பத காரணத்தால் அவற்றைத் தேடி சென்றார் .இவரது மாடுகள் கோரியாவடி கடற்கரையில் ஒரு அழகிய பேழையை சுற்றி நின்றன.அந்த பேழையை தூக்கி சென்று தற்போது கோவில் உள்ள இடத்திலபழைய பூவரசு மரத்தின் கீழே வைத்து விட்டு மீண்டும் தூக்க முற்பட்ட பொது அதனைத் தூக்க முடியவில்லை . உடனே பலரை அழைத்து வந்து பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய அம்மன் சிலை ஓன்று காணப்பட்டது.அந்த வேளை ஒரு வயோதிபப் பெண் ஒருவர் உரு ஆடி `´நான் கண்ணகி அம்மன் பத்ரகாளியுடன் வந்திருக்கிறேன் .இன்னும் ஆறு சிலைகள் இதே போல வேறு இடங்களுக்கு போயிருகின்றன.எனக்கு இந்த இடம் விருப்பத்துக்குரியது .என்னை இங்கேயே பிரதிஸ்டை செய்து ஆலயம் அமையுங்கள்´´ என வாக்கு கொடுத்தார். அவர் கூறிய படியே ஈழத்தில் கரம்பொன் ,காரைநகர் வட்டுகோட்டை மாதகல் சங்கானை சண்டிலிப்பாய் போன்ற இடங்களில் கரை ஒதுங்கியதால் அங்கேயே ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திரு ஆறுமுகம் உடனே கோவில் அமைக்க என்ன்னினார் ஆனால் போதிய அளவு மரங்கள் கிடைக்காத படியால் யோசித்து கொண்டு இருந்தார் .ஒரு நாள் புயல் நிமித்தம் பனைமரங்கள் முறிந்து விழுந்தன.இது இவரது ஆலய மைப்புக்கு உதவியாக இருந்தது .
பிற்காலத்தில் சுண்ணாம்பு கற்களால் ஆன ஆலயம் அமைக்கப் பட்டு நித்தியா பூசைகள் நடைபெற்றன.1881ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்கள் நடைபெற்றன .ஆடிப்பூரத்தில் தேர் திருவிழா நடைபெற்றன.இந்த திருவிழாக் காலத்தில் ஒருவரின் கனவில் கொடிமரம் கடல் கரையில் வந்திருப்பதாக சொல்லப்பட்டது .உடனே அங்கெ சென்று பார்த்த போது தரமான கொடிமரதுக்கான மரம் ஓன்று காணப்பட்டது . ஆலயத்தின் பக்கத்திலேயே பத்திரகாளி அம்மன் ஆலயமும் கட்டப் பட்டது .
ஆம் ஆண்டில் இவ்வாலயம் மீண்டும் புனரமைக்கபட்டது .கருவறையில் ராஜராஜேஸ்வரி அம்பாளும் இரண்டாம் மண்டப தெற்கு வாசல் நோக்கியபடி கண்ணகி அம்மனும் பிரதிஸ்டை செய்யபட்டது .இந்த பணியை பொரளை வர்த்தகர் கா.நாகலிங்கம் முன்னின்று செய்து முடித்தார் .இவ்வாண்டில் இருந்து சித்திரை மாதத்துக்கு திருவிழாக் காலம் மாற்றப்பட்டது . தொடர்ந்து உரிமையாளர் பரம்பரையை சேர்ந்த இருவர் உட்பட ஐவர் கொண்ட பஞ்சாயம் இந்த ஆலயத்தை பரிபாலித்தது.
1957இல் மீண்டும் கும்பாபிசேகம் நடைபெற்று சீரமைக்கப்பட்டது.பின்னர் இல் முற்றாக சுண்ணாம்பு கட்டிடம் இடிக்கப்படு சீமேந்தினால் புதிய ஆலயம் அமைக்கபட்டது .இந்த பணியை திரு.மு.முத்தையா பிள்ளை அவர்கள் சிறப்பாக செய்து முடித்தார் . மீண்டும் 1964இல் இந்த ஆலயம் புனரமைக்கப் பட்டது .இந்த கும்பாபிசேகத்தின் பின்னர் ஆலயத்தின் திருவிழாக்கள் பதினைந்து நாள்கள் நடைபெற முடிவெடுக்கப்பட்டது .
இந்த ஆலயத்தில் பெருமை மிக்க சிலப்பதிகார விழாநடை பெற்றமை சிறப்பான விசயமாகும் .1954இல் இந்திய இலங்கை தமிழ் ஆர்வலர்கள் எந்த கண்ணகி அம்மன் ஆலயத்தில் இந்த விழாவை நடத்துவது நேற்று சீட்டிழுப்பு மூலம் குலுக்கி பார்த்த போது புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயமே தெரிவானது.இந்த ஆலயத்தில் நிகழ்ந்த சிலப்பதிகார விழாவில் ம.பொ.சி.கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் ,அ.ச.ஞானசம்பந்தன் மற்றும் ஈழத்து அறிஞர்களான அமைச்சர் நடேசபிள்ளை பண்டிதர் கா.பொ.ரத்தினம் ,வித்துவான் பொன்.கனகசபை வித்துவான் சி.ஆறுமுகம் வித்துவான் க.வேந்தனார் க.சிவராமலிங்கம் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
1944இந்த ஆலயத்தில் திருவிழா செய்வோர் விபரம்
_____________________________________________________
1.திரு.ஆறுமுகம் உடையார் குடும்பம் (கொடியேற்றம்)
.2திரு .மா.சோதிநாதர் குடும்பம்
.3ஆசிரியர்கள் குழு
.4சுப்பையா நடராசா குடும்பம்
. 5தோட்ட விவசாயிகள்
.6கடல் தொழிலாளர்கள்
7.கொழும்பு வர்த்தகர்கள்
8சி.முத்துக்குமார் குடும்பம்
9பன்னிரண்டாம் வட்டார மக்கள்
10.முத்துக்குமார் .சின்னதுரை குடும்பம்
11மா.கந்தையா குடும்பம்
12சின்னையா குடும்பம் (வைரவர் மடை )
தண்ணீர்பந்தல் -தில்லையம்பலம் குடும்பம்
இவ்வாலயத்தின் ராஜகோபுரமும் தேரும் செய்து முடிக்கப்பட்டன.
இந்த ஆலயத்தின் வளர்ச்சியில் பங்காற்றியோர்
--------------------------------------------------------------------
ஆசிரியர்களான வித்துவான் சி ஆறுமுகம் நா.கார்த்திகேசு ,சங்கீத பூசனம் க.தாமோதிரம்பிள்ளை,சி.சின்னதுரை.சி.க.நாகலிங்கம் ,அ.க.கண்ணையா.மற்றும் ப,கதிரவேலு,மு.முத்தையாபிள்ளை நா .க.மயில்வாகனம் .சி கு செல்லையா ,சி.முத்துக்குமார் நா.சி செல்லையா இ க கந்தையா ந செல்லத்துரை மு கனகசபாபதி சோ க ஐயம்பிள்ளை அ குழந்தைவேலு க தியாகராசா மு க சண்முகராசா தா கிருஷ்ணசாமி ப.கனேசராசகுருக்கள் உரிமையாளர்கள் வரிசையில் ச.இராசரத்தினம் .ஆ.சபாரத்தினம் ஆகியோர் நிரந்தர பஞ்சாயத்தில் இடம்பெற்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக