சனி, 19 மே, 2012

மு.தளையசிங்கம்


மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்
“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
இதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.
மு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.
1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.
‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.
1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.
மு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.
1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.
அப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.
‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.
பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.
இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.
இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.
ஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.
இங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.
இவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.
புpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.
“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.
வாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?’
- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.
தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.
இலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.
மு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.
ஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.
இவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.
தனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.
சர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.
புங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.
தனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.
புங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.
புங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.
இருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
அவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.
அவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.
‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.
மு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.

எஸ்.கே.மகேந்திரன்


எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்
--------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது.
இவர் 1951 ஆம் ஆண்டு மாசித் திங்கள் மகர லக்கினமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாள் ஒன்பதாம் நாளிலே ௭ஆம் வட்டாரம் கந்தையா தங்கம்மா தம்பதிக்கு ஏக புத்திரனாக அவதரித்தார்.மழலைப் பருவத்திலேயே போசாக்கான அழகிய குழந்தை என்ற பட்டத்தினை திரு எ.எல்.தம்பி ஐயா இடம் பெற்ற பெருமை உடையவர்.இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாசாலை,கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலயம் என்பவற்றில் கற்று உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் மேற்ற்கொண்டார்.தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியிலே சட்டத்தரணியாக வெளியேறினர் .பின்வந்த காலங்களில் இந்தியாவிலே தனது எம்.ஏ. பட்டத்தினை பெற்றுக் கொண்டார்..
சட்டக் கல்லூரியில் நடை பெற்ற எழுந்தமான பேச்சுப் போட்டியில் முதலாவது இடத்தை பிடித்து துரைசாமி நினைவு தங்கப் பதக்கத்தைப் பறித்து எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார் .இவரது சமூக சேவை பாதையில் முதல் படியாக ௧௯௬௫ தனது பதினைந்தாவது வயதிலேயே ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தினை அமைத்து இளம் சந்ததியிடையே பெரும் அறிவுப் புரசியை ஏற்படுத்தினர்.ஆன்மிகப் பணியில் இவர் தனது மாமனாரின் (சபாரத்தினம்) வழியைபின்பற்றி பானாவிடைச் சிவன் கோவிலின் பாரிய வளர்ச்சிக்கு அடி கோலினார். இந்த ஆலயத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்று சிறப்பாக பணியாற்றினார். இந்த ஆலயத்தின் தொண்டுகளில் அன்னதானப் பணியில் புனரமைப்பு பணிகளில் எனா ஊரதீவு மடத்துவெளி சனசமூக நிலைய இளைஞர்களை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.
இவர் தனது அரசியல் பாதையில் அடைந்த உச்ச இலக்கு பராடத் தக்கது.ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் வழியில் அதன் மூளை என் வர்ணிக்கப்பட்ட வீ.நவரதினத்தை தனது குருவாக ஏற்று வளர்ச்சி அடைந்தார்.
அறுபது மூன்றாம் ஆண்டு மாசித் திங்களில் முற்றவெளி மைதான தமிழரசுக்
கட்சி மேடையில் இளம்பேச்சினை கர்ச்சித்து தலைவர்களின் பாராட்டைப் பெற்று ஆரம்பித்த இவரின் அரசியல் சொற்பொழிவு நெடுந்தீவு முதல் அம்பாறை வரை சுமார் இருபது வருடங்களாக ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய எஸ்.கே. அரசியல் மேடைகளில் அமிர்தலிங்கம், இராசதுரை ,போன்ற சிறந்த பேச்சாளர்களில் பட்டியலில் இவரது பெயரும் இணைந்து அந்த கால மேடைகளை எழுச்சி காண வைத்தது. வீ.நவரத்தினம் அடையாள அட்டை மசோதா எதிர்ப்புக் கொள்கை காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய போது இவரோடு சென்சொற்று கடனாக பின்சென்ற்றர். காலக்கிரமத்தில் மீண்டும் தாய்க் கட்சியோடு இணைந்து மாவட்ட சபை தேர்தல் அறிமுக காலத்தில் தீவுப்பகுதிக்கான வேட்பாளராக நியமிக்க கூடிய தகுதியை அடைந்து இளைஞர் பேரவை சார்பில் அ.சண்முகனாதணல் பிரேரிக்கப்பட்ட போது புங்குடுதீவின் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப களம் முதல் பாடுபட்ட வே.க.சோமசுந்தரம் என்ற மூத்தவருக்கு விட்டுக் கொடுக்கும்படி அப்போதைய யாழ் முன்னால் மேயர் விஸ்வநாதன் கேட்டதற்ற்காக விட்டுகொடுத்து பிரச்சாரப் பணியில் தன்னை ஈடுபடுத்தினர். அடுத்த தீவுப்பகுதி பாராளுமன்ற பிரதிநிதியாக இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி இந்த நேரத்தில் கொடுக்கபட்டுதும்
பின்வந்த காலங்களில் விடுதலைப் போராட்ட வேகத்தில் அததற்கான நேரம் கிடைக்காமலேயே போனது இவரது வாழ்வில் கிடைத்த துரதிஸ்டமான விதி என்றே கூறலாம்.
இளம்தமிழர் மன்றத்தினை திறந்து வைத்த அந்த விழாவில் தொழிலாளர் தோழன் என்ற நாடகத்தினை சிறப்பாக மேடையேற்றினர்.இவரது வழிகாட்டலில் அந்த கிராமத்து இளைஞர்களான அத்பர் நா.இராசதுரை .கு.யோகலிங்கம்,க,சிவானந்தன்,க.ஸ்ரீஸ்கந்தராசா,க.இராஜகுலசிங்கம்,சி.சசிகாந்தன்,த.தவக்குமார்.
ஐ.குலேந்திரன்,இரா.பிரபா,இரா.கந்தசாமி,காந்தி,ஆனந்தன்,நா.கருணாநிதி .சி.அரும்பொருள்,சி.நாகரத்தினம்,க,கந்தசாமி,க.ஜெயபாலன் ,ஆ.கைலைநாதன் ,போன்றோர் முக்கியமானவர்கள் ,இளம்தமிழர் மன்றத்தில் ஆரம்பித்த இவர் ஊரதீவு சனசமூகநினலியம் ,பானவிடை சிவன் கோவில்,ஊரதீவு கிராமமுன்னேற்ற சங்கம் புங்குடுதீவு மது ஒழிப்புக் கழகம் ,மாணவர் பேரவை,தமிழ் இளைஞர் பேரவை ,தமிழரசுக் கட்சி ,தமிழர் சுயாட்சி கழகம் ,தமிழர் விடுதலைக் கூட்டணி என சகல அமைப்புக்களிலும் ஈடுபாடு காட்டி வெற்றி கண்டார்,. தனது கிராமத்தோடு மட்டும் நின்று விடாது அயல் கிராமமான மடத்துவெளி சமூக சேவை இளைஞர்களோடும் எளிதில் பழகி அவர்களையும் தன்னோடுஈர்த்துக் கொண்டார்.
1978தை பத்தொன்பதில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்து புங்குடுதீவுக்கு காலடி எடுத்து vஐப்பதை ஒட்டி எடுக்கப்பட்ட விழா ஊரதீவு ,மடத்துவெளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கமலாம்பிகை மஹா வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடாத்தப்பட்டது .இந்த விழாவினை அ.சண்முகநாதன் ,நா.தர்மபாலன் .சு.மா.தனபாலன்,சிவ.சந்திரபாலன் ,பொ.அமிர்தலிங்கம் pontறோர் முன்னின்று சிறப்பாகக நடத்தியதாக கனடா பூவரசம்பொழுது இதழ் எழுதி இருக்கிறது.இந்த விழாவில் அ.அமிர்தலிங்கம்,மன்கையற்ற்கரசி அமிர்தலிங்கம் ,வே.யோகேஸ்வரன்,உட்பட பெரிய தலைவர்கள் வந்திருந்து வாழ்த்தி பேசியிருந்தார்கள் .விழாவை சிறப்பிக்க
சு.மா.தனபாலனின் இயக்கத்தில் மெழுகுவர்த்தி அணைகின்றது ,என்ற நாடகமும் சிவ.சந்திரபாலனின் கிராமத்து அத்தியாயம் என்ற தாள லய நாடகமும் அரங்கேறியது .

வ.பசுபதிப்பிள்ளை


புங்குடுதீவின் கல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை 
__________________________________________________
புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி ஆற்றிய பெருமகன் இவர்.
கதருடை  அணிந்து .வீபூதி மூன்று குறிகளாக அணிந்து மெல்லிய தோற்றத்துடன் பொதுநல சேவை  வலம்    வந்தவர் இந்த பசுபதிபிள்ளை விதானையார் அவரகள ஆவார் .
சைவ வித்திய விருத்தி சங்கத்துடன் இணைந்து பல பாடசாலைகளை எமது மண்ணில் அமைத்து திறம்பட நிர்வகித்து கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்ட கல்வி தெய்வம் இவர்.ஸ்ரீ கணேச ,பராசக்தி வித்தியாசாலைகளை அமைத்து நிர்வகித்தவர் .அத்தோடு சித்திவிநாயகர் வித்தியாசாலை .புங்குடுதீவு மகா வித்தியாலயம் அகியவ்டிரின் ஆரம்பத்துக்கும் பெரும் முயற்சியில் பங்கெடுத்து வெற்றி கண்டவர்.புங்குடுதீவின் அனைத்து பாடசாலைகளுக்கும் சைவ சமய சம்பந்தபட்ட பெயர்களையே வைப்பதில் பெரு வெற்றி கண்டதும் மகிழ்ச்சிக்குரியது.1910  பங்குனி மூன்றில் ஸ்ரீ கணேச வித்தியாசாலையை ஆரம்பித்து1954 வரை அதன் முகாமையாளராக பணி ஆற்றி இந்த பாடசாலையின் அதியுன்னத வார்ச்சிக்கு காரணமானவர்.ஆரம்ப காலத்தில் கிராமக் கோடு நீதிபதியாகவும் ,பின்னர் சுமார் இருபது வருடங்களாக கிராம சங்க அக்கிரசானராகவும் மண்ணுக்கு சேவை செய்த சேவையாளன் .அந்நியர்களின் மத பிரசார அழுத்தத்தின் நெருக்கடியான கட்டத்தில் பல சிரமங்களின் மத்தியில் புரட்டஸ்தாந்து பாடசாலைகளை ஆரம்பித்து அன்னியர் சலுகை கொள்கை வகுப்பு யுத்தம் செய்த வேளையிலும் சைவ பெரியார்களை அணுகி ஒன்று பட்டு பெரியார் நீ.அம்பலவாணர் அவர்களின் காணியில்1910இல்  ஸ்ரீ கணேச வித்தியாசாலையை நிறுவினர்.தொடர்ந்து அந்த காலத்தி லேயே 1914ஆம் ஆண்டு ஆவணி வரை அரச நன்கொடை இன்றி சொந்த முயற்சியில் இந்த பாடசாலைய நடத்தி வந்தார் .முதல் இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் போசகராக இருந்தார் .அப்போது நாடு தழுவிய ரீதியில் சைவ சமய தேவார பாராயணங்கள் ,பாடல்கள் .உடல் பயிற்சி போன்றவற்றில் உயர்தரப் பரீட்சைகளை நடத்தி பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தார் .அந்த காலத்தில் முதலியார் குல.சபாநாதன் அவர்கள் 1951ஆம் ஆண்டு வித்தியாலய பழைய மாணவர் சங்க இதழில் ´´புங்குடுதீவினை வெளியுலகினர் அறிய வைத்த பெருமை பசுபதிபிள்ளை மூலமே என்றும் வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர் பெரியவர்களை உபசரிப்பதில் இனியவர் என்றும் எழுதி உள்ளார் .

இவர் முதலி விதானையாரக கடமை புரிந்து பின்னர் கிராம சங்க தலைவராக தொண்டு ஆற்றினார் .சிவன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் வட மாகாணத்திலேயே  சிறந்து விளங்கிய வேதாகம சாஸ்திர பாடசாலையை அமைத்த பெருமை பெற்றவரும் இவரே. யாழ் மாவட்டத்தின் ஏராளமான பிராமணர்கள் வேதம் கற்க இந்த பாடசாலையே திணை நின்றது சாதனையாகும் .இது போன்ற ஒரு பாடசாலையை யாழ்ப்பாணத்தில்நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி சிலரின் தடைகளினால் முடியாமல் போனது.இன்று இலங்கையிலேயே எந்த கிராமத்திலும் இல்லாத வாறு புங்குடுதீவு  பதினைந்து பாடசாலைகள் உள்ள ஒரு கிராமமாக கல்வி கோலோச்சுகிறது என்றால் இவரை நாங்கள் வணங்கி மதிப்பளிதாக வேண்டும் . எத்தனை கோயில்களை நாம் கட்டி வழிபட்டாலும் எமது கலவி கோயில்களை திறந்து வாய்த்த இந்த பகவனை தொழுவோமா. இவரதுஸ் சேவை  கண்டு எழுதிய சில கவி மாலைகள் .

பண்டிதமணி கணபதிபிள்ளை அவர்கள்.

புங்குடுதீவேன்றார் புகல் பசுபதிப்பிள்ளை 
எங்கும் புகழ் நிறுவி ஏகினார் -இங்கிவர் போல் 
தோன்றிற் புகழொடு தோன்றுக அக்திலார்
தொன்றிலி ற் தோன்றாமை நன்று 

கவிஞர் ந.க.சண்முகநாத பிள்ளை அவர்கள்
கல்வி  அழகே அழகென்று கண்டவர் 
      கண்ணிய மிகை பசுபதியார் 
பல்கிப் பலவளம் பெருகிடவே 
      பாதையடியொற்றி ச் சென்றிடுவோம் 


க.ஐயாத்துரை ஆசிரியர்


உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர் 
_____________________________________

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில்  வசித்து வந்த தில்லையர் கந்தையா அவர்களின் ஒன்பது புதவர்களில் ஐந்தாவது புத்திரனாக29. 04 .1916   இல்  அவதரித்தார் இந்த பெருமகன். பெரிய குடும்ப அங்கத்தவர்களை கொண்ட வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர் கஷ்டப்பட்டு கல்வி  கற்று ஒரு  ஆசிரியராக வாழ்வைத்  தொடங்கினார். ஆரம்பத்தில் வல்லன் ஸ்ரீ சண்முகநாதன் வித்தியா சாலையிலும் பின்னர் முப்பது ஆண்டுகளாக மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயத்திலும் தனது பாரிய கற்பித்தல் பணியை செவ்வனே செய்து முடித்தார் .இந்த காலப் பகுதியில் பாடசாலையில் இருக்கும் நேரத்தையும் தூங்கும் நேரத்தையும் தவிரமீதி உள்ள அத்தனை கால நேரத்தையும்  பொதுநலன் ஒன்றுக்காகவே வாழ்ந்து  மரணித்தார்.
  1952இல் வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்தை ஆரம்பித்தது முதல் காலன் காலடியில் வீழும் வரை இந்த கிராம முன்னேற்றசங்கதுக்காகவே வந்தார் என்றால் மிகை ஆகாது.இதனை தொடர்ந்து மடத்துவெளி சன சமூக நிலையத்தை 1959 இல் ஆரம்பித்து மேலும் ஒரு அத்திவாரத்தை புங்குடுதீவு கிழக்கு  மக்களுக்கு இட்டுக் கொடுத்தார். பிற்காலத்தில் வல்லன் சனசமூக நிலையத்தையும் ஸ்தாபித்து அதன் வா சிகசாலையயும்  கி.மு.சங்க கட்டிடத்திலேயே அமைத்து அந்த பகுதி மக்களின் அறிவுபசியை போக்கினார். 

சிரமதானப் பணிபற்றி பேசும் போது எமது மண்ணில் இரண்டு பெரியோரின் பெயர்கள் தான் சொல்லப் பட்டாக வேண்டும் .ஒருவர் சர்வோதயம் திருநா அண்ணா .மற்றவர் ஐயாத்துரை ஆசிரியர் அவர்களே .மடத்துவெளி வல்லன் பகுதிகளில் அமைந்துள்ள அத்தனை குளங்கள் கிணறுகள் கடற்கரை அணைக்கட்டுக்கள் மயானம் என அத்தனையையும் இவரது சிரமதானப் பணிகள் மூலம் சீர் செய்து மக்களின் செல்வாக்கை ,அன்பைப்  பெற்றார் .இவர் அத்தனை பணிகளையும் இலகுவாக செய்யவில்லை .அரச  நிர்வாகத்துடன் மோதி தர்க்கம் செய்து எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில் அனுமதியையும்  ஆதரவையும்  பெற்று தொடங்கும் எல்லாப் பணிகளுக்கும் பல புல்லுருவிகள் தடையை ஏற்படுத்தும் போதும் அவற்றை தனது சாதுரியமான புத்தியால்  முறியடித்து வெற்றி கண்டுள்ளார்.

ஏராளமான திட்டங்களை கி.மு.சங்கத்தின் மூலம் அரசிடம் இருந்து கேள்விபத்திரம் எடுத்து செவ்வனே நிறைவேற்றி உள்ளார் .இவ்வகையான இவரது பல சிரமதானபணியில் மக்களை ஈடுபடுத்தி மக்களின் வறுமையை போக்குவதோடு திட்டங்களையும் முடித்து சாதனை படைத்துள்ளார் .இந்த சிரமதான பணிகளில் மேற் பார்வையாளராக பணிபுரிந்தவன் என்ற வகையில் இவரது கஷ்டங்களை நேரில் கண்டு வியந்தவன் நான். புங்குடுதீவு பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை அங்கத்தவராகவும்   பங்காற்றி உள்ளார் .

வல்லன் கிராமம் என்றால் கஷ்டப்பட்ட வசதியற்ற வரட்சியான கிராமம் என்ற பெயருக்கு முக்கிய காரணம் போக்குவரத்து வசதியின்மையே யாகும். 
புங்குடுதீவின் பிரதான வீதி வழியே நடைபெறும் போக்குவரத்து சேவைகள் வல்லன் பகுதிக்கு கிடைக்காது.இப்பகுதி மக்கள் மடத்துவெளி புங்கடி சந்தியில் அல்லது ஆலடிச் சந்தியில் இறங்கி  சுமார் 4--8 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகவே பிரயாணம் செய்தனர். இந்த நிலையைப் போக்க மடத்துவெளி - வல்லன்-ஆலடி வீதி இணைக்கபட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என அறிந்த இந்த பெருமனிதன் ஏறாத படிகள் இல்லை போகாத அலுவலகங்கள் இல்லை. வெய்யில் மழை எல்லாம் இவரை தோழனாக்கிப் பார்த்தன.நான் இவரது மாணவனாக இருந்த காலத்தில் கமலாம்பிகை பாடசாலை முடிய இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்று மதிய உணவு எடுக்கும் நோக்கத்தை தவிர்த்து ,அப்படியே பேரூந்தில் வடக்கு பகுதி நோக்கி பயணமாவார் .இப்படி  தன்னை வருத்தி தொண்டு செயயும் உள்ளம் யாருக்கும் வராது.ஆமாம்  ஊர் காவற்துறை ,வேலணை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் அமைந்துள்ள அரச காரியாலயங்களுக்கு சென்று யாரையோ எவரையோ எப்படியோ பிடித்து தனது காரியத்தை சாதிக்க வல்ல தொண்டன்.
இத்தனைக்கும் இவருக்கு துணை ஒரே ஒரு பழைய கறுப்புக் குடை மட்டுமே.
மடத்துவெளி வல்லன் மக்கள் அந்த வீதியால் நடக்கும் ஒவ்வொரு கணமும் இந்த வாத்தியாரின் இரத்த உறைவே  அது என்று எண்ண வேண்டும் 
எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில்வீதியை திறந்தா கிவிட்டது .இனி பேரூந்து சேவைக்காக போராடவேண்டும் .போராடினார் .வென்றார் . பா. உ.கா.பொ.ரத்தினம் ஆதரவில் அவரின் மூலம் எழுபதுகளின் மத்தியில் அந்த வீதியை பேரூந்து ஓடும் வீதியாக்கினார்.அந்த பெருநாளில் மடத்துவெளி சனசமூகநிலயத்தினர் ஆதரவளிக்க பேரூந்து புறப்பட்டு வலம் வந்த காட்சி கண்டு மக்கள் பூரித்து நின்ற நிலை இன்றும் என் கண்ணில் தெரிகின்றது .
இந்த பெருமகன் தான் வல்லன் திருப்பெருந்துறை நாகதம்பிரான் கோவிலை சீர்திருத்தி முறையான பராமரிப்பில் நித்திய நைமித்திய பூஜைகளை நடத்தி திருவிழாக்களையும் ஏற்பாடு செய்து ஒழுங்கு படுத்தினார் .
கி.மு சங்கம் மூலமாக நெசவு நிலையம், தையல் பயிற்ச்சி நிலையம் ,சிறுவர் பாடசாலை என அத்தனை பணிகளையும் செய்து முடித்த சாதனையாளன்.
அரசியலில் கூட ஏராளமான ஆற்றுகையை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஆரம்பத்தில் கிராமசபை உறுப்பினாராக தெரிவாகி சேவை செய்தவர் பின்னர் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் வழியில் நின்று அரசியல் விழிப்புணர்வை உண்டாக்கினார் .கா.பொ.இரத்தினம் அவர்களின் நம்பிக்கைக்கு உள்ளாகி மேலும் பல நன்மைகளை கிராமத்துக்கு பெற்று கொடுத்தார் .
ஒட்டு மொத்தமாக ஒரே பார்வையில் இவரது சேவையை வரிசைப்படுத்தினால் பின்வருமாறு வகுக்கலாம் 
--------------------------------------------------
ஆசிரியப்பணி 
சிரமதானப்பணி
அரசியல் பணி 
சைவ நெறிப் பணி 
சனசமூகநிலைய கி.மு.சங்கபணிகள்
----------------------------------------------------
இவரது தொண்டில் பயன் பெற்றவை 

வல்லன் சனசமூக நிலையம் 
மடத்துவெளி சனசமூக நிலையம் 
வல்லன் கி.மு.சங்கம் 
கமலாம்பிகை வித்தியாலயம் 
சண்முகநாதன் வித்தியாலயம் 
புங்குடுதீவு ப.நோ.கூட்டுறவுசங்கம்
தமிழர் விடுதலைக் கூட்டணி 
நெசவு பயிற்ச்சி நிலையம்                                                                                                      தையல் பயிற்ச்சி நிலையம் 
சிறுவர் பாடசாலை 
------------------------------------------
முழுமனிதன் என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அமரர் ஐயாத துரையை தயங்காமல் சுட்டி காட்டலாம் . பொதுநல தொண்டு செய்ய புறப்படும் யாரும் இவன் பாதையை பின்பற்றுங்கள் .குடும்பம் பிள்ளைகள் சொத்து  சுயநலம் இத்தனையையும் மறந்து உழைத்த ஒரு தொண்டு மன்னன் இப்ப்போது எம்மத்தியில் இல்லை. இவர் தனது சமூகப் பணியில் சாதாரண எதிர்ப்பை சந்திக்கவில்லை .உயிர் ஆபத்தை கூட சந்தித்துள்ளார் .ஒரு தடவை சமூக விரோதிகளால் கொத்தி குதறப் பட்டு வைத்தியசாலையில் உயிருக்கு போராடி கொண்டு கிடந்த காட்சி என் உள்ளதை வெகுவாக பாதித்தது எனலாம்.இவரது இறப்புக்கு கூட இந்த காரணங்கள் சாட்சியா னவை.
இவரது நாமத்தை புங்குடுதீவு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் .மறக்கவும் கூடாது.நன்றி 
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து 

பெரிய வாணரும் சின்ன வாணரும்


பெரிய வாணரும் சின்ன வாணரும்

பெரிய வாணரும் சின்ன வாணரும் 
----------------------------------------------------
கடல் கொண்ட குமரிக்கண்டத்தின்  எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் த்ஹெவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த பெருமநிதர்கள் தான் சின்ன வாணரும் பெரிய வாணருமாகும். சின்ன வாணர் என செல்லமாக அழைக்கப்படும் ச.அம்பலவாணர் மடத்துவெளி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று உயர்கல்வியை கோப்பாய் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தமிழ் ஆங்கில மொழி ஊடகத்தில் கற்று தேறினார். பெரிய வாணரும் இவருமாய் இணைந்து புங்குடுதீவின் துயர் போக்க எண்ணினார்.முதலில் அந்த கால வழமையான பாணியில்  பொருள்தேடும் பொருட்டு மலேசியாவுக்கு சென்று தம் பொருளாதரா அத்திவாரத்தை பலம் ஆக்கினர் .பொருள் தேட சென்ற இடது பொருளாதார வசதிகள் வாய்ப்புகளை கண்டு யோசித்தனர் .அங்கெ கண்ட வீதிகள் பாலங்கள் கட்டிடங்கள் கடல் தடுப்பு அணைகள் மின்வசதிகள் என பன்முக அபிவிரித்திகளை கண்டு தம்மை மாற்றி கொண்டனர்.சிந்தைகளை சுழற விட்டனர். மலேசியாவில் ஏராளமான புங்குடுதீவு மக்கள் தொழில் நிமித்தம் அந்த காலத்திலேயே வசித்து வந்தனர் அனைவரையும் அன்போடு அழைத்து புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர் .இந்த சங்கத்தின் பெரும் பணியாக யாழ் பண்ணை .புங்குடுதீவு பாலங்களை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தினை முன் வைத்தனர் .

மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார்.
1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார்.
1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள்.
பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார்.
1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார்.
புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர்.
இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.
இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.
அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும்.


பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.-

தொண்டன் திருநா


தொண்டன் திருநா 
____________________

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூக சேவை ஆன்மிகம் தமிழ்த்தொண்டு என அனைத்து துறைகளையும் தொட்டு சேவையாற்றினார்.

தனது இளவயதில் பெருங்காடு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம அந்த பகுதி மக்களுக்கு சேவை செய்தவர்  தனது பேச்சாற்றல் துணை கொண்டு அகில இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார் .நெடுந்தீவு முதல் அம்பாறை வரை தனது சிறந்த பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்து தமிழரசு கட்சியின் தூணாக விளங்கினார்.அக்கட்சியின் உயர்ந்த பதவிகளில் அலங்காரம் செய்தார்.ஒரு முறை இவருக்கான அனுபவம் திறமை காரணமாக கிடைக்கவிருந்த உயர் பதவி ஒன்று சில உள்நோக்கம் கொண்டோரால் தவறி போனது.
கட்சி அரசியல் மண்ணுக்கு பெரிதாக உதவ முடியாத நிலை கண்டு அதனை விட்டு சர்வோதய அமைப்பில் இணைந்து கொண்டார் .இல் அகில இலங்கை சர்வோதயத்தில் சேர்ந்து கொண்ட இவரால் வட பகுதிஎங்கணும்  இந்த அமைப்பு பரவ ஆரம்பித்தது.இந்த அமைப்பின் ஊடாக பல வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளை இனத்தவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.ஏராளமான வெளிநாட்டு உதவி நிறுவனங்களை எமது மண்ணுக்கு வரவழைத்து அதன் மூலம் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்.காலப்பகுதியில் சர்வோதய சிங்கள தலைமை செய்யும் சில வேறுபாடுகளை உணர்ந்து தனியே வட இலங்கை சர்வோதயம் என்ற புதிய அமைப்பை நிறுவினார்.இதன் தலைமையகத்தை புங்குடுதீவில் அமைத்துக் கொண்டார்.